இந்தியா

புதிய ராணுவ தளபதியாக தல்பீர் சிங் பொறுப்பேற்றார்

செய்திப்பிரிவு

ராணுவ தளபதி விக்ரம்சிங் ஓய்வு பெறுவதை தொடர்ந்து, புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தல்பீர் சிங் சுகாக், இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

30 மாதங்கள் ராணுவ தளபதியாக நீடிக்க இருக்கும் தல்பீர் சிங், நாட்டின் 26-வது ராணுவ தளபதி அவார்.

இன்று புதிய ராணுவ தளபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாக்கிடம் பொறுப்புகளை ஒப்படைத்து, தற்போதை ராணுவ தளபதி விக்ரம் சிங் பொறுப்பிலிருந்து விடைபெற்றார்.

கடந்த 1987-ம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையில் தல்பீர் இடம்பெற்றார். கடந்த மே மாதம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின்போது, தல்பீர்சிங் சுகாக், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே, ராணுவ தளபதி நியமனத்தில் அவசரம் காட்டுவது கூடாது என்று அப்போதைய அரசுக்கு, முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் மற்றும் பாஜகவால் எதிர்ப்பு தெரிவிவிக்கப்பட்டது. எனினும் பாஜக தலைமையிலான புதிய அரசு அமைந்ததும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற அருண் ஜேட்லி, தல்பீர் சிங்கின் நியமனத்தில் மாற்றம் இல்லை என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT