ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஜமியா நிஜாமியா இறையியல் பள்ளி முஸ்லிம்கள் இறால் சாப்பிட வேண்டாம் என 'பத்வா' அறிவித்திருக்கிறது.
பத்வா ஆணையில், இறால் என்பது மீன் வகையைச் சார்ந்தது இல்லை. எனவே அது முஸ்லிம்கள் புசிக்கக்கூடியது அல்ல. அதனால், முஸ்லிம்கள் இறால் உண்பதை தவிர்க்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜமியா நிஜாமியா இறையியல் பள்ளி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதால் இந்தப் பள்ளி விதித்துள்ள 'பத்வா' முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முஸ்லிம் மத சட்டத்திட்டங்களின்படி பத்வா விதிக்கப்படுகிறது. ஒரு பிரச்சினையை சட்ட ரீதியாக அணுக பத்வா உதவுகிறது.