விவசாயிகள் வேளாண் குறித்த புதிய தகவல்களை உடனடியாக தெரிந்துகொள்வதற்கு வசதியாக 'கிசான் டிவி' என்ற சேனல் அறிமுகப்படுத்தப்படும் என்று பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
2014-15 ஆண்டுக்கான பொதுப் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். அப்போது, "விவசாயிகளின் நலனுக்காக, டிடி - கிசான் என்ற பெயரில், விரைவில், தனி டிவி சேனல் துவக்கப்படும்.
வேளாண் மற்றும் அதனை சார்ந்த அனைத்து தகவல்களையும் உடனடியாக விவசாயிகள் அறிந்துக்கொள்ள வசதியாக இது அமையும்.
வானிலை முன்னறிவிப்புகள், புதிய வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள், நீர் சேமிப்பு குறித்த யோசனைகள், விவசாய விதைகள் குறித்த தகவல்கள் ஆகியவை தொடர்பான முக்கிய ஆலோசனைகள் இந்த சேனலில் வழங்கப்படும்.
இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படும். இந்த புதிய சேனல் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும்" என்றார்.