இந்தியா

அதிருப்தி நீதிபதிகள் நால்வருடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு

பிடிஐ

உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என அதிருப்தி தெரிவித்த 4 நீதிபதிகளுடனும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று (செவ்வாய்க்கிழமை) பேசினார். சுமார் 15 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாகத் தெரிகிறது.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர்.

இதன்காரணமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும் மூத்த நீதிபதிகளுக்கும் இடையிலான மோதல் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலைகூட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் 4 மூத்த நீதிபதிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு இன்னமும் தீர்க்கப்படவில்லை, ஒரிரு நாட்களில் இந்த பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படும் என, அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில், இன்று காலை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனக்கு எதிராக அதிருப்தி தெரிவித்த 4 நீதிபதிகளையும் தனது சேம்பருக்கு (நீதிபதியின் அறை) வரவழைத்தார். அவர்களுடன் மனம்விட்டு பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தை மீண்டும் ஜனவரி 17-ம் தேதி இப்பேச்சுவார்த்தை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT