இந்தியா

மதுபான வரி ஊழல் வழக்கு: ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: புதிய மதுபான வரிக்கொள்கையின்படி டெல்லி முழுவதும் 800-க்கும் மேற்பட்ட தனியார் மதுபான கடைகள் திறக்க ஆம் ஆத்மி அரசு அனுமதி அளித்தது. இதில் பெருமளவு ஊழல் நடந்தது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆம் ஆத்மி எம்எல்ஏ சஞ்சய் சிங் கடந்த அக்டோபர் 4-ம் தேதி முதல் சிறையில் உள்ளார். இவர் அப்ரூவராக மாறிய தொழில் அதிபர் தினேஷ் அரோராவிடம் இருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளார். சஞ்சய் சிங் மீது நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இது இந்த வழக்கில் தாக்கல் செய்யப்படும் ஐந்தாவது துணை குற்றப்பத்திரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT