பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்று வரும் தமிழ்ப் புத்தகத் திருவிழாவில் டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய ‘கையருகே கிரீடம்' நூல் வெளியிடப்பட்டது.
கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகை யாளர் சங்கத்தின் சார்பாக பெங்களூருவில் 2வது ஆண்டாக தமிழ்ப்புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவாஜிநகர் அருகிலுள்ளஇன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் வருகிற டிசம்பர் 10-ம் தேதிவரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை முதல்மாலை வரை மாணவர்களுக்கான போட்டிகள், புத்தக வெளியீடு, கருத்தரங்கம், பட்டிமன்றம், நாடகம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6 மணிக்கு டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய ‘கையருகே கிரீடம்' நூலை எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் வெளியிட மூத்த பத்திரிகையாளர் மதியழகன் பெற்றுக்கொண்டார். நூலைப் பற்றி தியோடர் பாஸ்கரன், மதியழகன், டில்லிபாபு ஆகியோர் உரையாற்றினர். பின்னர் நூலின் தொகுப்பாசிரியர் செல்வி ஏற்புரை நிகழ்த்தினார்.
டி.ஆர்.டி.ஓ.விஞ்ஞானி டில்லிபாபுவின் புதிய நூலான ‘‘கையருகேகிரீடம்'' இந்து தமிழ் திசை குழுமத்தில் இருந்து வெளிவரும் வெற்றிக்கொடி மாணவர் நாளிதழில் தொடராக வெளிவந்தது.
தற்போது இந்த நூல் பெங்களூரு புத்தக திருவிழாவில் அரங்கத்தில் பண்டிதர் புத்தக அரங்கில் விற் பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு இந்து தமிழ் திசை பதிப்பகம் மற்றும் தி இந்து பதிப்பகத்தின் நூல்களும் 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தது.