மத்தியப் பிரதேசத்தில் பத்மாவத் திரைப்படத்தின் பாடல் ஒன்றுக்கு பள்ளிக் குழந்தைகள் ஆடிப் பாடியதால் கர்னி சேனா அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மாணவர் ஒருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பத்மாவத்’. இதில் ராஜஸ்தானின் சித்தூரை ஆண்ட ராஜபுத்திர வம்ச ராணி பத்மினி வேடத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறி கர்னி சேனா அமைப்பு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்வேறு சிக்கல்களைக் கடந்து இப்படம் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் பத்மாவத் திரைப்படத்தின் பாடல் ஒன்றுக்கு பள்ளிக் குழந்தைகள் நடனமாடியதால் கர்னி சேனா அமைப்பினர் அப்பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மாணவர் ஒருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்துள்ளனர்.