இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: தமிழக வீரர் வீரமரணம்

பீர்சதா ஆஷிக்

ஜம்மு - காஷ்மீரில் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் தமிழக வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார்.

இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "புதன்கிழமை இரவு தொடங்கி இன்று அதிகாலைவரை ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஏ.சுரேஷ் வீரமரணமடைந்தார். ஏ.சுரேஷ் 78-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர். இவரது சொந்த ஊர் தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்திலுள்ள பண்டார செட்டி பட்டி" என்றார்.

1976-ம் ஆண்டு பிறந்த சுரேஷ் 1995-ம் ஆண்டு எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கிக் குண்டுகளைப் பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தினர். இதில் அர்னியா பகுதிகுட்பட்ட கிராமங்களும் பாதிக்கப்பட்டன. மக்கள் இரவு முழுவதையும் அச்சத்தில் கழித்தனர். இருப்பினும், இதுவரை ராணுவத்தினர் கிராம மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் நடவடிக்கையை தொடங்கவில்லை

SCROLL FOR NEXT