இந்தியா

ரூ.36,468 கோடிக்கு தேஜஸ் விமானங்கள் வாங்க ஆர்டர்

செய்திப்பிரிவு

பெங்களூரு: தேஜஸ் போர் விமானங்களை பெங்களூருவில் உள்ள மத்தியஅரசின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) தயாரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் ரூ.36,468 கோடிக்கு தேஜஸ் போர் விமானங்களை தயாரித்து ராணுவம், கடற்படை, விமானப் படைக்கு அளிக்க மத்திய அரசு ஆர்டர்களைக் கொடுத்துள்ளது.

2024 பிப்ரவரி முதல் தேஜஸ் விமானங்களை எச்ஏஎல்தயாரித்து பாதுகாப்புத் துறையிடம் அளிக்கும். உள்நாட்டில் ராணுவத் தளவாடங்கள், விமானங்கள் தயாரித்தலை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT