இந்தியா

பிரதமர் மோடி நாளை திருப்பதி வருகை

செய்திப்பிரிவு

திருமலை: தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி நாளை 26-ம் தேதி திருப்பதிக்கு வர உள்ளதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் பயணத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துதிருப்பதி மாவட்ட ஆட்சியர்வெங்கட ரமணா தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் நேற்று ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி மற்றும் திருமலைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

SCROLL FOR NEXT