ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த வியாழக்கிழமை முதல் அத்துமீறி நடத்தி வரும் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 5 வீரர்கள் உள்ளிட்ட 11 பேர் பலியாகி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லை கோட்டுப் பகுதியிலும், சர்வதேச எல்லைப்பகுதிகளான கதுவா, ஜம்மு, பூஞ்ச், ரஜோரி, ராம்கார்க் ஆகிய பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறிய ரக ராக்கெட் குண்டுகளை வீசியும், தானியங்கி துப்பாக்கி மூலம் சுட்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு நடந்த தாக்குதலில் ராணுவ வீரர் சி..கே. ராய் குண்டு காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார், அவர் இன்று உயிரிழந்தார்.
இதனால் பாகிஸ்தான் ராணுவத்தினரின் செயலால் உயிரழப்பு 11 ஆக உயர்ந்துள்ளது என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் மூலம் கடந்த 4 நாட்களில் 3 ராணுவ வீரர்கள், பி.எஸ்.எப். வீரர்கள் இருவர், 6 பொதுமக்கள் என 11 பேர் பலியாகி உள்ளனர்.