இந்தியா

சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதால் ரயில் மீது கற்களை எறிந்த மக்கள் @ பஞ்சாப்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலத்திலிருந்து பிஹார் செல்ல வேண்டிய சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதால் ரயில் மீது கற்களை எறிந்துள்ளனர் மக்கள். இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் சிர்ஹிந்தில் உள்ள ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

பண்டிகையை முன்னிட்டு இந்த சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த சிறப்பு ரயில் பாஞ்சாப் மாநிலம் பதேகாட் சாகிப் மாவட்டத்தில் உள்ள சிர்ஹிந்த் ரயில் நிலையத்தில் இருந்து பிஹார் மாநிலம் சஹர்சா பகுதிக்கு செல்ல இருந்தது. அதனால் ரயில் நிலையத்தில் திரளான மக்கள் திரண்டிருந்தனர். இந்த சூழலில் ரயில் ரத்து குறித்த தகவல் அவர்களுக்கு கிடைத்துள்ளது.

அதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீதும், ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில் மீது கற்களை எறிந்து தாக்கியுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு ரயில்களை அறிவித்தது இந்திய ரயில்வே. இருந்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியது, டிக்கெட் எடுத்தும் பயணிக்காத பயனர்கள் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக ரயில்வே நிர்வாகம் மீது பல தரப்பினர் விமர்சனம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை சூரத் நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT