இந்தியா

ஒடிசா | எருமை மாடு மீது மோதி பயணிகள் ரயில் தடம்புரண்டது

செய்திப்பிரிவு

சம்பல்பூர்: ஒடிசாவின் ஜார்சுகுடாவிலிருந்து சம்பல்பூருக்குச் சென்ற மெமு பயணிகள் ரயில் தடம்புரண்டது. ரயில் பாதையில் இருந்த எருமை மாடு மீது மோதிய அந்த ரயில் தடம்புரண்டுள்ளது. இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள சராலா பகுதிக்கு அருகே புதன்கிழமை மாலை நடந்துள்ளது.

இதில் உயிரிழப்பு பாதிப்பு ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சம்பல்பூர் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் ரயில்வே குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். தண்டவாளத்தை சீரமைப்பதற்கான பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் நிகழ்விடத்துக்கு மீட்பு ரயிலும் சென்றுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்துள்ளன.

மீட்பு பணிக்கு பின்னர் சம்பந்தப்பட்ட ரயில் தடத்தில் சோதனை ஓட்டம் பார்க்கப்பட்ட பினார் 30 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் ரயில் விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் ஓடிசாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT