மும்பை: மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக மகா ராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மக்கள் தொகையில் மராத்தா சமூகத்தினர் பங்கு 33 சதவீதமாக உள்ளது. இப்போது பொதுப் பிரிவில் உள்ள இவர்கள் கல்வி, வேலை வாய்ப்பில் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மராத்தா இடஒதுக் கீடு போராட்டம் தீவிரமடைந்துள் ளது. இந்த சமூகத்தைச் சேர்ந்த மனோஜ் ஜராங்கே-பாட்டீல், மராத்தா இடஒதுக்கீடு வழங்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கடந்த அக்டோபர் 25-ம் தேதி தொடங்கினார்.
இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்தது. சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடை பெற்றன.
இதன் ஒரு பகுதியாக மராத்தாசமூகத்தைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களின் வீடு மற்றும் அலுவலகங் களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, அமைச்சர்கள் மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை எனில், தண்ணீர் குடிப்பதையும் நிறுத்தப் போவதாக மனோஜ் ஜராங்கே எச்சரிக்கை விடுத்தார்.
அனைத்து கட்சி கூட்டம்: இந்த சூழ்நிலையில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா (உத்தவ் தாக்கரே) மூத்த தலைவர் அனில் பராப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, ‘‘பிற சமூகத் தினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், சட்டத்துக்கு உட்பட்டு, மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக் கீடு வழங்க அனைத்து கட்சி தலை வர்களும் ஆதரவு தெரிவித்துள் ளனர். அதேநேரம் இதற்கான சட்ட நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய அரசுக்கு கால அவகா சம் தேவைப்படுகிறது. மேலும், மற்ற சமூகத்தினரின் இடஒதுக்கீட்டிலும் பாதிப்பு ஏற்படக் கூடாது. எனவே, மராத்தா சமூகத்தினர் போராட் டத்தை கைவிட்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குறிப்பாக கால வரையற்ற உண்ணாவிரத போராட் டத்தை மனோஜ் ஜராங்கே கைவிட வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்றார்.