போபால்: மத்தியபிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் வரும் 17-ம் தேதி மத்தியபிரதேச மாநில சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி அமைச்சர்கள் பலர் மனு
தாக்கல் செய்தபோது இணைக்கப் பட்ட பிரமாணப் பத்திரத்தில் அவர்கள் தங்களிடம் துப்பாக்கிகள் இருப்பதைத் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரமாணப் பத்திரம் மூலம் 45 சதவீத அமைச்சர்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் இருப்பது தெரியவந்துள்ளது. அமைச்சர்கள் விஜய் ஷா, கோவிந்த் சிங் ராஜ்புத், ராஜ்யவர்த்தன் சிங் ஆகியோர் தலா 3 துப் பாக்கிகளை வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ம.பி.யில் உள்ள 22 அமைச்சர் களில் 7 பேர் 2 துப்பாக்கிகளை வைத்துள்ளனர். அமைச்சர்கள் உஷா தாக்குர், பிரபுராம் சவுத்ரி, விஷ்வாஸ் சாரங், அர்விந்த் பதோரியா, ஜக்தீஷ் தேவ்ரா, நரோத்தம் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு துப்பாக்கியை வைத்துள்ளனர்.
அமைச்சர் விஷ்வாஸ் சாரங் தன்னிடம் உள்ள துப்பாக்கி தனக்குபரிசாக வந்ததாகத் தெரிவித்துள் ளார். இந்த துப்பாக்கிகள் அனைத் துக்கும் தங்களிடம் உரிமம் இருப் பதாக தெரிவித்துள்ளனர்.
மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடமும் ஒரு துப்பாக்கி உள்ளது. அமைச்சர்கள் கோபால் பார்கவ், கமல் படேல், பிரேம் சிங் படேல், ஓம் பிரகாஷ் சக்லேச்சா, மீனா சிங், துளசி சிலாவத் ஆகியோர் தங்களிடம் துப்பாக்கிகள் இல்லை என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவித் துள்ளனர்.