இந்தியா

பாபா ராம்தேவ் மனு மீது பதிலளிக்க மத்திய, மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் கரோனா பெருந்தொற்று காலத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில், “அலோபதி மருத்துவம் முட்டாள்தனமான அறிவியல். ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் உயிரிழந்தனர். முதலில் ஹைட்ராக்சிக்ளோரோக்வின் தோல்வி அடைந்தது. பின்னர் ரெம்டிவிசிர் தோல்வியுற்றது. பின்னர் பிளாஸ்மா தெரபிதடை செய்யப்பட்டது. ஸ்டீராய்டுகளும் தோல்வியடைந்தன. இவர்மெக்டின் உள்ளிட்ட மருந்துகளும் தோல்வி அடைந்தன’’ என்று குற்றம் சாட்டினார்.

பாபா ராம்தேவின் கருத்தை எதிர்த்து பிஹார், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி அவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுகள் விரிவான பதில் மனுக்களை தாக்கல் செய்யக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

SCROLL FOR NEXT