பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

நகைக் கடைக்காரருக்கு ரூ.1.15 கோடி மின் கட்டணம்

செய்திப்பிரிவு

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் மின் கட்டணம் கடந்த 4 ஆண்டுகளில் 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கோட்டூர் பகுதியில் சிறிய நகைக்கடை வைத்திருக்கும் அஷோக் குமார் என்பவருக்கு மட்டும் இம்மாதம் மின் கட்டணம் ரூ.1.15 கோடி வந்துள்ளது. சாதாரணமாக மாதாமாதம் இவரது கடைக்கு ரூ.8 ஆயிரம் வரை கட்டணம் வரும். அதைத் தவறாமல் செலுத்தி வந்த இவருக்கு, ஒரு கோடி ரூபாய் மின் கட்டணம் வந்ததும் என்ன செய்வதென்று புரியவில்லை.

உடனடியாக இது குறித்து அப்பகுதி மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தார். அவர்கள் வந்து கடையின் மின்சார மீட்டரை சோதனையிட்டதில், அது மிக விரைவில் சூடாவதால்தான் மின் கட்டணமும் மிக அதிகமாக வந்துள்ளதாக தெரிவித்தனர். விரைவில் புதிய மீட்டர் பொருத்தப்பட்டு புதிய கட்டணத்திற்கான ரசீது வழங் கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT