இந்தியா

பகத் சிங் பிறந்தநாள்: பிரதமர் மோடி மரியாதை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் பிறந்தநாள் செப்.28-ம் தேதி (நேற்று) கொண்டாடப்பட்டது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், "சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவரது தியாகமும், இந்திய சுதந்திரத்துக்கு அவர் அர்ப்பணிப்புடன் ஆற்றிய பணியும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது. தைரியத்தின் கலங்கரை விளக்கமாகவும், நீதி மற்றும் சுதந்திரத்துக்கான இந்தியாவின் இடைவிடாதபோராட்டத்தின் அடையாளமாகவும் பகத்சிங் என்றும் இருப்பார்" என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT