சென்னை விமான நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு திரும்பி வந்த பேருந்து ஒன்று திடீரென தி பிடித்து எரிந்தது.
சென்னை விமான நிலையத்தில், விமானம் திரையிறங்கிய பின், அதில் இருந்து இறங்கும் பயணிகள் பேருந்து மூலம் வெளியே அழைத்து செல்லப்படுகின்றனர். இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இண்டிகோ விமானத்தில் இருந்து இறங்கியபயணிகளை பேருந்து ஒன்று ஏற்றிச் சென்றது. அவர்களை இறக்கிவிட்டு, மீண்டும் ஓடுபாதை பகுதிக்கு அந்த பேருந்து வந்தது.
அப்போது திடீரென அந்த பேருந்து தீப் பிடித்து எரிந்தது. தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து வேகமாக தீயை அணைத்தன. தீ விபத்தின் போது பேருந்தில் பயணிகள் இல்லாததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.