பாஸ்போர்ட் புத்தகங்கள் பற்றாக் குறை காரணமாக பாஸ்போர்ட் வழங்குவதில் அசாதாரண தாமதம் நிலவுவதால் இதில் மத்திய அரசு உடனே தலையிடவேண்டும் என்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.ராஜீவ் வலியுறுத்தினர்.
மாநிலங்களவையில் செவ் வாய்க்கிழமை பூஜ்ய நேரத்தில் பி.ராஜீவ் பேசும்போது, “இந்திய குடிமக்கள் ஆயிரக்கணக்கானோர் பாஸ்போர்ட்டுக்காக காத்திருக் கின்றனர். தட்கல் விண்ணப்பங் களை கூட அதிகாரிகள் பெற் றுக்கொள்ளத் தயாராக இல்லை. பாஸ்போர்ட் புத்தகங்கள் பற்றாக்குறையே இதற்கு காரணம்.
தட்கல் விண்ணப்பங்கள் ஏற் றுக்கொள்ளப்படாததால் வழக்க மான முறையில் விண்ணப்பித்து விட்டு மக்கள் மாதக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
இந்திய ரூபாய் நோட்டு மற்றும் பாஸ்போர்ட் புத்தகங்கள் அச்சிடும் நாசிக் அச்சகம் முழு அளவில் இயங்காததே பற்றாக்குறைக்கு காரணமாக கூறப்படுகிறது.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வெளிநாட்டுப் பயணங்களை தள்ளிவைக்க நேரிட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலை யிடவேண்டும். குறித்த காலத்தில் பாஸ்போர்ட் விநியோகம் செய் யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.