ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட் பாராட்டுக் குரியது. எதிர்கால பார்வை, வளர்ச்சியை மையமாக கொண்டுள்ளது இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் பற்றி ட்விட்டரில் மோடி வெளியிட்டுள்ள கருத்து:
சாமானியர்களை மனதில் கொண்டு அருமையான பட்ஜெட்டை சதானந்த கவுடா தாக்கல் செய்துள்ளார். சிறந்த சேவை, ரயில்களின் வேகம், பயணிகள் பாதுகாப்பு மீது கவனம் செலுத்தியுள்ள இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சி மீதும் கவனத்தை செலுத்தியுள்ளது.
வெளிப்படைத்தன்மை, நேர்மைக்கு ரயில்வே துறை முக்கியத்துவம்தரும்.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை காண நவீனமய ரயில்வே அமைக்கும் முயற்சி இந்த பட்ஜெட். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.
வெங்கய்ய நாயுடு:
இந்திய ரயில்வே எந்த நிலையில் உள்ளது என்பதை விரிவாக அலசி உள்ளது உள்ளபடி வெளிக்காட்டி இருக்கிறது பட்ஜெட்,. பயணிகளின் பாதுகாப்பு,, பத்திரமான பயணம், சேவை ஆகிய 3 அம்சங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளன. முந்தைய பட்ஜெட்டுகளில் நூற்றுக்கணக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அந்த பணிகள் முழுமை பெறவில்லை. அந்த திட்டங்களை நிறைவு செய்யும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
ரவிசங்கர் பிரசாத்:
ரயில்வே நிதி நிலைமை மேம்பாடு, பாதுகாப்பான ரயில் பாதை, பயணிகளுக்கு கூடுதல் வசதி, ரயில்வே கட்டமைப்பை வலுப்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது இந்த பட்ஜெட் .என்று சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.