இந்தியா

முதல்வர் கேசிஆருடன் பிரச்சினை இல்லை: ஆளுநர் தமிழிசை பேச்சு

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தெலங்கானா மாநில ஆளுநராக பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5-ம் ஆண்டு தொடங்கியதை தொடர்ந்து, நேற்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் பேசியதாவது: ராஜ் பவனை மக்கள் பவனாக மாற்றினேன்.

எனக்கு எவ்வித அரசியல் நோக்கமும் கிடையாது. குறுக்கு புத்தியும் அறவே கிடையாது. மருத்துவத் துறையில் தெலங்கானா அரசு மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறது. எனக்கும் முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை.ஆனால், மாற்றுக் கருத்துக்கள், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். சில மசோதாக்களில் குறை இருந்ததால், அவற்றை திருப்பி அனுப்ப நேரிட்டது. இதில் அரசியல் இல்லை. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

SCROLL FOR NEXT