இந்தியா

பாரத் என அழைப்பதில் என்ன தவறு உள்ளது? - ரோஜா கேள்வி

செய்திப்பிரிவு

திருமலை: நம் நாட்டை பாரத் என அழைப்பதில் என்ன தவறு உள்ளது? என ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியா என்ற நமது நாட்டின் பெயரை பாரதம் என்று மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவுகின்றன. இந்நிலையில், ஆந்திர சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா, நேற்று காலைஏழுமலையானை தரிசித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘நம் நாட்டின் பெயரை இந்தியாவிற்கு பதில், பாரத் என மாற்றம் செய்யப்படுவதால் தவறேதும் இல்லையென்றே எனக்கு தோன்றுகிறது. இந்தியா என ஆங்கிலேயர்கள் வைத்த பெயரை விட, பாரத் என அழைப்பதே மிகவும் நன்றாக உள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT