இந்தியா

370-வது சட்டப்பிரிவு ரத்து விவகாரம் - தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட காலம் நிலுவையில் இருந்த இந்த மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கி 16 நாட்கள் நடத்தியது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்ளிட்ட ஐந்து நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இதனை விசாரித்தது.

மத்திய அரசு மற்றும் மனுதாரர்கள் என இருதரப்பிலும்வாதங்கள் நிறைவடைந்ததை யடுத்து மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

இதுகுறித்து தேசிய மாநாட்டுகட்சியின் தலைவரும், மனுதாரர்களில் ஒருவருமான ஹஸ்னைன்மசூதி கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட வாதங்கள் முழு திருப்தியளிக்கின்றன. அனைத்து அம்சங்களும் நம்பிக்கைக்குரிய வகையில் வாதிடப் பட்டன" என்றார்.

SCROLL FOR NEXT