இந்தியா

உதயநிதியின் கருத்துக்கு பசவராஜ் கண்டனம், கார்கே மகன் ஆதரவு

செய்திப்பிரிவு

பெங்களூரு: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘சனாதனம் என்பது கொசு, டெங்கு, ஃபுளூ, மலேரியா போன்ற நோய். அதை எதிர்க்கக் கூடாது. ஒட்டுமொத்தமாக‌ அழிக்க வேண்டும்’’ என பேசினார்.

இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவ‌ருமான பசவராஜ் பொம்மை கூறும்போது, ‘‘உதயநிதியின் கருத்து ஜனநாயக விரோதமானது. இதன் மூலம் அவர் இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளார்’’ என விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே, ‘‘சகமனிதனை மனிதனாக மதிக்காத, சம உரிமை அளிக்காத, எந்த மதமும் நோயைப் போன்றது.உதயநிதிக்கு அவர் நினைக்கும் கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT