கோப்புப்படம் 
இந்தியா

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

செய்திப்பிரிவு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு தலைவராக திருப்பதி எம்.எல். கருணாகர் ரெட்டி நியமனம் செய்யப்பட்ட நிலையில், 24 பேர் கொண்ட அறங்காவலர் குழு உறுப்பினர்களும் ஆந்திர அரசால் அறிவிக்கப்பட்டனர்.

இதில், சிலர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும், அவர்களை உடனடியாக நீக்க வேண்டுமெனவும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று டாக்டர் எஸ்.ஷங்கர், எம். மேகசேஷபாபு, வெங்கட சதீஷ் குமார், அமோல் காலே மற்றும் உதயபானு உள்ளிட்டோர் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

SCROLL FOR NEXT