இந்தியா

மத்திய அரசுக்கு பதற்றம் - மல்லிகார்ஜுன கார்கே கருத்து

செய்திப்பிரிவு

மும்பை: ‘இண்டியா’ கூட்டணி தலைவர்களின் கூட்டம் மும்பையில் 2 நாட்களாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சோனியா, ராகுல், நிதிஷ், தேஜஸ்வி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது: ‘இண்டியா’ கூட்டணி பலம் பெற்றுள்ளதால், மத்திய அரசுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற புலனாய்வு ஏஜென்சிகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம். இனிமேல் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் அதிக சோதனைகள் நடைபெறலாம். அதற்கு ‘இண்டியா’ கூட்டணி தலைவர்கள் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.

SCROLL FOR NEXT