இந்தியா

இந்தியாவில் 3 மாதங்களில் 19 லட்சம் வீடியோவை நீக்கி யூடியூப் நடவடிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் 3 மாதங்களில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்களை யூடியூப் நீக்கியுள்ளது.

இது தொடர்பாக யூடியூப் சமூக வலைதள நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி சமூக விதிமுறைகளை மீறியதற்காக இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை உலகம் முழுவதிலும் 64.8 கோடி வீடியோக்களை யூடியூப் நீக்கியுள்ளது. இந்தியாவில் இதே காலகட்டத்தில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.

உலக நாடுகள் இடையே நீக்கப்பட்ட வீடியோக்கள் எண்ணிக்கையில் இதுவே மிக அதிகம் ஆகும்.

அமெரிக்காவில் 6 லட்சத்து 54,968 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ரஷ்யாவில் இருந்து 4,91,933 வீடியோக்களும் பிரேசில் நாட்டிலிருந்து 4,49,759 வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன.

யூடியூப் நிறுவனம் தனது அறிக்கையில், “ஒரு நிறுவனமாக ஆரம்ப நாட்களில் இருந்து, எங்களின் சமூக வழிகாட்டுதல்கள் யூடியூப் சமூகத்தை தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து பாதுகாத்து வருகின்றன.

இயந்திரப் பயன்பாடு மற்றும் விமர்சனங்கள் அடிப்படையில் எங்களின் கொள்கைகளை நாங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளது.

SCROLL FOR NEXT