உயிரிழந்த வி.எஸ்.டி.சாய் 
இந்தியா

ஹைதராபாத் | போட்டியில் பங்கேற்று விளையாடியபோது உயிரிழந்த செஸ் வீரர்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: செஸ் போட்டியில் பங்கேற்று விளையாடியபோது உயிரிழந்துள்ளார் வி.எஸ்.டி.சாய் எனும் நபர். எல்ஐசி நிறுவனத்தில் பணியாற்றி அவர் ஓய்வு பெற்றுள்ளார்.

72 வயதான அவர், செஸ் போட்டிகளில் ஆர்வமுடன் தொடர்ச்சியாக பங்கேற்று விளையாடி வந்துள்ளார். ஹைதராபாத் செஸ் மையத்தின் செயற்குழு உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வந்துள்ளார். சனிக்கிழமை அன்று கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் அவர் பங்கேற்று விளையாடி உள்ளார். இதன் 5-வது சுற்றுப் போட்டியில் விளையாடியபோது சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த வி.எஸ்.டி.சாய், தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் ஹைதராபாத் நகரில் வசித்து வந்துள்ளார்.

SCROLL FOR NEXT