இந்தியா

இந்தியாவில் செலவு குறைந்த நகரம் அகமதாபாத்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நைட் பிராங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள நகரங்களின் பட்டியலில் கூறியிருப்பதாவது: செலவு மிகுந்த நகரங்களின் வரிசையில் மும்பை முதலிடத்தில் உள்ளது.

மும்பையில், மக்கள் தங்கள் வருமானத்தில் 55 சதவீதத்தை வீட்டுக் கடனுக்கான மாதத் தவணைக்கு செலவிடுகின்றனர். அதற்கு அடுத்த இடத்தில் ஹைதராபாத் உள்ளது. அங்கு மாதத் தவணை - வருவாய் விகிதம் 31 சதவீதமாக உள்ளது. மூன்றாவது இடத்தில் டெல்லி (30%) உள்ளது.

பெங்களூரு மற்றும் சென்னையில் மாதத் தவணை - வருவாய் விகிதம் 28 சதவீதமாகவும், புனே மற்றும் மேற்கு வங்கத்தில் அது 26 சதவீதமாகவும் உள்ளது. அகமதாபாத்தில் அது 23 சதவீதமாக உள்ளது. அந்த வகையில், செலவு குறைந்த நகரமாக அகமதாபாத் திகழ்கிறது என்று நைட் பிராங்க் குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT