இந்தியா

தேவ் தீபாவளியை முன்னிட்டு கங்கை நதிக்கரையில் 11 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றம்

செய்திப்பிரிவு

வாராணசி: வாராணசி​யில், கார்த்​திகை பவுர்​ணமியை முன்னிட்டு நடை​பெற்ற தேவ் தீபாவளி விழாவையொட்டி, கங்கை நதிக்​கரையோரம் உள்ள படித்​துறைகளில் 11 லட்​சத்​துக்​கும் அதிக​மான அகல் விளக்குகள் ஏற்​றப்​பட்​டன. அவை பார்ப்​ப​தற்கு கண்​கொள்ளா காட்​சி​யாக அமைந்​தது.

உத்​தர பிரதேச மாநிலம், வாராணசி​யில், தீபாவளி முடிந்து 15 நாட்​களுக்​குப் பிறகு, கார்த்​திகை பவுர்​ணமி தினத்​தன்று தேவ் தீபாவளி (தெய்​வங்​களின் தீபாவளி) சிறப்​பாகக் கொண்டாடப்படுவது வழக்​கம். இதன்​படி, இவ்​விழா நேற்று சிறப்பாகக் கொண்​டாடப்​பட்​டது. இவ்​விழா​வின் முக்​கிய நிகழ்ச்சியாக, உள்​நாட்​டிலேயே தயாரிக்​கப்​பட்ட 2,100 ட்​ரோன்கள் பங்​கேற்ற கண்​கவர் வான்​வழிக் காட்சி நடை​பெற்​றது.

இந்த ட்​ரோன்​கள் மூலம் இரவு நேரத்​தில் வானில் சிவபெரு​மான், கங்கை அம்​மன் உரு​வங்​கள் மற்​றும் காசி​யின் ஆன்​மிகப் பாரம்​பரியத்​தைப் பிரதிபலிக்​கும் காட்​சிகள் உரு​வாக்​கப்​பட்​டன.

இது​த​விர, கங்கை ஆரத்தி, முப்​பரிமாண ஒளிப்​படக் காட்சி, லேசர் ஒளிக்​காட்சி, சுற்​றுச்​சூழலுக்கு பாதிப்​பில்​லாத வாணவேடிக்​கைகள் மற்​றும் கலை நிகழ்ச்​சிகளும் நடை​பெற்​றன. இந்த விழாவில், பல்​வேறு மாநிலங்​களில் இருந்​தும், வெளி​நாடுகளில் இருந்​தும் ஏராளமான சுற்​றுலாப் பயணிகள் மற்​றும் பக்​தர்​கள் பங்​கேற்​றனர். உத்​தர பிரதேச மாநில சுற்​றுலா மற்​றும் கலாச்சாரத் துறை அமைச்​சர் ஜெய்​வீர் சிங் விழா​வில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்கேற்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT