புதுடெல்லி: பாஜகவின் பஞ்சாயத்து ராஜ் கவுன்சில் மாநாடு டாமன்-டையூவில் நேற்று நடைபெற்றது. இதில்நாட்டின் மத்திய, மேற்கு பகுதிகளை சேர்ந்த பாஜக பஞ்சாயத்து கவுன்சிலர்கள், தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிரதமர்மோடி காணொலி வாயிலாக பேசியதாவது:
நான் குஜராத் முதல்வராகப் பணியாற்றிய போது ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சியத்தை நோக்கிபயணம் கொள்வேன். பெண் கல்வி,காவல் துறை முன்னேற்றம், மருத்துவ துறை முன்னேற்றம் என பல லட்சியங்களை ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றினேன்.
தொண்டர்கள் அளிக்கும் தக வல்களின் அடிப்படையில் அரசுஅதிகாரிகள் மூலம் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.
அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தொண்டர்களே பாஜகவின் பலம். இதன்படி ஒவ்வொரு கிராமம், வட்டம், மாவட்டத்தையும் முன்னேற்ற பாஜக பஞ்சாயத்து கவுன்சிலர்கள், தலைவர்கள் அயராது பாடுபட வேண்டும். ஒவ்வொரு கிராமத்துக்கும் மாவட்டத்துக்கும் சிறப்பு அடையாளம் இருக்கும். அந்த அடையாளத்தை பிரபலப்படுத்த வேண்டும்.
கிராம, வட்ட, மாவட்ட அளவில் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டுஅவற்றுக்கு தீர்வு காண பாஜக கவுன்சிலர்கள் முயற்சி செய்ய வேண்டும். தூய்மை இந்தியா திட்டம், ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கு திட்டம் உள்ளிட்டவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி உள்ளன. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு வழங்கப்பட்ட மானியம் ரூ.70,000 கோடியில் இருந்து ரூ.3 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளபாஜக கவுன்சிலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜகவை சேர்ந்த கவுன்சிலர்கள், ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர்சார்ந்த 3 லட்சிய திட்டங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட வேண்டும். அதாவது உங்கள் பகுதியில் 4 மாதங்களில் ஒரு லட்சிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதன்படி 5 ஆண்டுகளில் 15 லட்சிய திட்டங்களை நிறைவேற்ற முடியும். கிராம, வட்ட, மாவட்ட அளவில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்டால் மட்டுமே வரும் 2047-ம் ஆண்டில் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.