இந்தியா

அமில வீச்சு வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

அமில வீச்சுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தாமதம் ஏற்படுவது தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமில வீச்சுகளில் பாதிகப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பான பொதுநல வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்: "அமில வீச்சுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இத்தகைய தாமத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கமளிக்க வேண்டும். அமில வீச்சுகளில் பாதிக்கப்பட்டவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது" என தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பாக மத்திய அரசும், மாநில அரசுகளும் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT