இந்தியா

சர்வதேச இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது - 5 இந்தியர்கள் உட்பட 17 பேர் தேர்வு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உலகை அச்சுறுத்தி வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைக்கான தீர்வுகளை உருவாக்கும் இளைஞர்களுக்கு (8 முதல் 16 வயது) ஆண்டுதோறும் அமெரிக்காவின் ‘ஆக்சன் பார் நேச்சர்' என்ற அமைப்பு விருதுகளை வழங்கி வருகிறது.

இதன்படி, நடப்பு ஆண்டுக்கு சுற்றுச்சூழல் சவால்களை சமாளிக்க தேவையான முன்முயற்சிகளை மேற்கொண்டதில் உலகம் முழுவதிலுமிருந்து 17 இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். எய்ஹா தீக்சித் (மீரட்), பெங்களூரைச் சேர்ந்த மன்யா ஹர்ஷா, நிர்வான் சோமானி, மன்னத் கவுர் (புதுடெல்லி), கர்னவ் ரஸ்தோகி (மும்பை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT