ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி கள் குறித்து பாஜக மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியதாவது:
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு குற்றவாளி அப்சல் குருவின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கோரி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாஜக குரல் கொடுத்தது. ஆனால் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் குறித்து பாஜக தலைவர்களில் ஒருவர்கூட எதுவுமே கூறவில்லை.
இந்த விவகாரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பாஜக மவுனம் காப்பது ஏன்? ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிகூட இதுவரை ஒருவார்த்தைகூட கூறவில்லை. இதன் மூலம் பாஜகவின் உண்மையான முகம் வெளிப்பட்டு உள்ளது. அந்தக் கட்சி தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. வாக்கு வங்கி ஆதாயத்துக்காக மட்டுமே குரல் எழுப்புகிறது.
இவ்வாறு கபில் சிபல் தெரிவித்துள்ளார்.