இந்தியா

10-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி - மன்மோகன் சிங் சாதனை சமன்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு சுதந்திர தினத்தை முன்னிட்டு 17 முறை தொடர்ச்சியாக செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி இருக்கிறார்.

நேருவின் மகள் இந்திரா காந்தி 16 முறையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடர்ச்சியாக 10 முறையும் தேசிய கொடியை ஏற்றி இருக்கின்றனர்.

தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக 10-வது முறையாக இன்று தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதன்மூலம் மன்மோகன் சிங்கின் சாதனையை அவர் சமன் செய்ய உள்ளார்.

SCROLL FOR NEXT