இந்தியா

தெலங்கானா விளம்பர தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமனம்

செய்திப்பிரிவு

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தெலங்கானா மாநிலத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக உருவாகி உள்ள தெலங்கானா மாநிலத்தின் புதிய திட்டங்கள் குறித்து இந்திய அளவிலும் உலக அளவிலும், சானியா விளம்பரப்படுத்துவார் என அம்மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக இயக்குநர் ஜெயேஷ் ராஜன் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவின் தூதராக நியமிக்கப்பட்ட நியமன கடிதத்துடன் ரூ.1 கோடி மதிப்பிலான காசோலையை சானியா மிர்சாவுக்கு, தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் இதற்கான நிக்ழ்ச்சியின்போது வழங்கினார்.

அப்போது, சர்வதேச டென்னிஸ் தரப் பட்டியலில் 5 ஆவது இடத்தில் இருக்கும் சானியா, முதல் இடத்திற்கு வர வேண்டும் என்று வாழ்த்திப் பேசினார்.

தெலங்கானா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள வீராங்கனை சானியா மிர்சா, ஐதராபாதை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT