மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் பேசுகிறார், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. படம்: பிடிஐ 
இந்தியா

மணிப்பூர் தீப்பற்றி எரியும்போது நாடாளுமன்றத்தில் நகைச்சுவையா? - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கண்டனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மணிப்பூர் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் வேளையில் நாடாளுமன்றத்தில் சிரிப்பும் நகைச்சுவை பேச்சும் சரிதானா என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதை கேட்டேன். பிரதமர் நகைச்சுவையாக பேசுகிறார், சிரிக்கிறார். அதற்கு ஆதரவாக ஆளும் கூட்டணி எம்.பி.க்கள் கோஷம் எழுப்புகின்றனர். மணிப்பூர் மாநிலம் பல நாட்களாக தீப்பற்றி எரிவதை பிரதமர் மறந்துவிட்டார் போலும்.

நாடாளுமன்றத்தின் நடுவில் அமர்ந்திருந்த பிரதமர் வெட்கமின்றி சிரித்துக்கொண்டிருந்தார். பிரச்சினை காங்கிரஸோ அல்லது நானோ அல்ல. மணிப்பூரில் என்னநடக்கிறது, அவை ஏன் தடுக்கப்படவில்லை என்பதே பிரச்சினை. மணிப்பூர் தீப்பற்றி எரிய பிரதமர் விரும்புகிறார். தீயை அணைக்க அவர் விரும்பவில்லை.

மணிப்பூரில் ராணுவத்தால் 2-3 நாட்களில் அமைதியை ஏற்படுத்த முடியும். ஆனால் ராணுவத்தை மத்திய அரசு ஈடுபடுத்தவில்லை.இவ்வாறு ராகுல் குற்றம்சாட்டினார்.

SCROLL FOR NEXT