இந்தியா

எளிய முறையில் திருமணம் செய்து கொண்ட கிருஷ்ணா மாவட்ட பெண் இணை ஆட்சியர்

செய்திப்பிரிவு

விஜயவாடா: ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மசூலிப்பட்டினத்தின் மாவட்ட இணை ஆட்சியர் டாக்டர் அபரிஜிதா சிங். இவரும், ஹைதராபாத்தில் உள்ள ஐபிஎஸ் போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் தேவேந்திர குமாரும் நேற்று பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.

மசூலிப்பட்டினம் இணை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பத்திரப் பதிவு அதிகாரி முன்னிலையில் இவர்கள் மிக எளிமையான முறையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பூங்கொத்து கொடுத்து புதுமண தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

புதுமண தம்பதியர் இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள். திருமணத்திற்கு பிறகு இவர்கள் வேமுலவரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டாலம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டனர்.

SCROLL FOR NEXT