திருமலை: சென்னை ஏழுமலையான் கோயில் விரிவாக்கத்துக்கு ரூ.5.11 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர்வெங்கடநாராயணா சாலையில் திருமலை திருப்பதி தேவஸ் தானத்துக்கு சொந்தமான ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலைச் சுற்றி அமைந்துள்ள 3 பேருக்கு சொந்தமான ரூ.35 கோடி மதிப்பிலான 5.5 ஏக்கர் பரப்பளவு கொண்டஇடங்களை வாங்கி, கோயிலை விரிவாக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, இதுவரை ரூ.8,15,15,002 நன்கொடை வசூலாகி உள்ளது. இந்நிலையில், நேற்று திருப்பதி தேவஸ்தான தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆலோசகர் குழு தலைவர் சேகர் ரெட்டி தலைமையில் 9 பேர் கொண்ட நன்கொடையாளர்கள் குழுவினர் திருப்பதிக்கு வந்தனர்.
அப்போது, திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டியை அவர்கள் சந்தித்து, ரூ.5.11 கோடிக்கான காசோலையை சென்னை ஏழுமலையான் கோயில் விரிவாக்கப் பணிகளுக்காக வழங்கினர்.