முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு எழுப்பியுள்ள புகார்களுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் காங்கிரஸ் கட்சியும் பதிலளிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி செவ்வாய்க்கிழமை கூறும்போது, “அரசியல் காரணங் களுக்காக நீதித்துறை உட்பட பல்வேறு அரசியல் சட்ட அமைப் புகள் முறைகேடாகப் பயன்படுத் தப்பட்டன என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க காங்கிரஸ் கட்சியும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் முன்வரவேண்டும். காங்கிரஸ் கட்சியும் ஊழலும் ஒன்றுக்கொன்று இணைந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீதிபதிகள் நியமனத்தில் செய்த முறைகேடு, காங்கிரஸ் எவ்வாறு அரசியல் சட்ட அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தியது என்பதற்கு உதாரணமாகும்’ என்றார்.
பாஜக எம்.பி.க்கள் கூட்டம்
கடந்த திங்கள்கிழமை, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாடாளுமன்ற மத்திய அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. சமீபத்தில் பிரேசிலில் நடை பெற்ற `பிரிக்ஸ்’ மாநாட்டில் இந்தியாவின் அக்கறையை மோடி எழுப்பியதற்கும், பிரிக்ஸ் வங்கியின் தலைமைப்பொறுப்பை இந்தியாவிற்காகப் பெற்றதற் காகவும் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
காஸா நிலைமை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வெளியிட்ட அறிக் கைக்காக நிதியமைச்சர் அருண் ஜேட்லி அவரைப் பாராட்டினார்.
இந்தக் கூட்டத்தில், பாஜக எம்.பி.க்களின் தனி உதவி யாளர்களுக்கு மும்பையில் ஒரு வார பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் சீர்குலைவு நடவடிக்கைகளை மீறி கட்சி எம்.பி.க்கள் நாடாளு மன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எழுப்பியதற்காக அவர்களை மோடி பாராட்டினார்.
மாநிலங்களவையில் மசோ தாக்கள் தாக்கல் செய்யப்படும் போது அனைவரும் தவறாது கலந்துகொள்ளவேண்டும் என்று மோடி அவர்களைக் கேட்டுக் கொண்டார்.