கோப்புப்படம்

 
இந்தியா

அமெரிக்காவில் இருந்து 1,076 இந்தியர்கள் வெளியேற்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நடப்​பாண்​டில் அமெரிக்​கா​வில் இருந்து 1,076 இந்தியர்​கள் வெளி​யேற்​றப்​பட்டு உள்​ளதாக மத்​திய அரசு தெரிவித்​துள்​ளது.

கடந்த ஆண்டு ஜனவரி​யில் அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்​றார். அவர் பொறுப்​பேற்ற பிறகு அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருக்​கும் வெளி​நாட்​டினர் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. கடந்த ஆண்​டில் மட்​டும் 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் அமெரிக்​கா​வில் இருந்து வெளியேற்றப்​பட்​டனர்.

இந்த சூழலில் மத்​திய வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் ரந்​தீர் ஜெய்​ஸ்​வால் டெல்​லி​யில் நேற்று முன்​தினம் நிருபர்​களிடம் கூறிய​தாவது:

கடந்த 2025-ம் ஆண்​டில் அமெரிக்​கா​வில் இருந்து 3,567 இந்​தி​யர்​கள் வெளி​யேற்​றப்​பட்​டனர். நடப்​பாண்​டில் இது​வரை அமெரிக்​கா​வில் இருந்து 1,076 இந்​தி​யர்​கள் வெளி​யேற்​றப்​பட்டு உள்​ளனர்.

இந்த விவ​காரத்​தில் அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறோம். சட்​டப்​பூர்​வ​மாக அமெரிக்​கா​வில் குடியேறிய​வர்​கள் மீது எவ்​வித நடவடிக்​கை​யும் எடுக்​கக் கூடாது என்று தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக தங்கி லாரி ஓட்​டுநர்​களாக பணி​யாற்​றிய 30 இந்​தி​யர்​கள் அண்​மை​யில் கைது செய்​யப்​பட்​டனர். முன்​னாள் அதிபர் பைடன் ஆட்​சிக் காலத்​தில் அவர்​கள் பணி விசா பெற்​றனர்.

அவை காலா​வ​தி​யாகி​விட்​டன. எனவே அவர்​கள் விரை​வில் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்​பப்​படு​வார்​கள் என்று அமெரிக்க அரசு தெரிவித்​து உள்​ளது.

SCROLL FOR NEXT