ரயில்களில் உணவுத் தரத்தை மேம்படுத்தும் வகையில், புகழ்பெற்ற நிறுவனங்களின் ‘ரெடி டூ ஈட்’ உணவுகள் அறிமுகம் செய்யப்படும் என்ற ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தனது பட்ஜெட் உரையில் கூறிய தாவது: கேட்டரிங் சேவையை மேம்படுத்துவதற்கு, மூன்றாவது நபர் சோதனை மூலம் உணவுப் பொருள்களின் தரத்தை உறுதிப்படுத்தும் நடைமுறை அறிமுகம் செய்யப்படும். இந்த சோதனைக்கு தேசிய தர நிர்ணய ஆணையத்தின் உதவி பெறப்படும்.
ரயில்களில் கேட்டரிங் சேவை யின் தரம், சுகாதாரத்தை மேம்படுத்தவும், பலவகை உணவு வழங்கிடும் வகையிலும் புகழ்பெற்ற நிறுவனங்களின் சமைக்கப்பட்ட (ரெடி டூ ஈட்) உணவுகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும்.
ரயில்களில் விநியோகிக் கப்படும் உணவின் தரம் குறித்து பயணிகளின் கருத்தை அறிவதற்கு ஐ.வி.ஆர்.எஸ். சேவை விரைவில் தொடங் கப்படும். ரயில்களில் உணவின் தரம், சுவை, சுகாதாரம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட அளவு இல்லாவிட்டால், ஒப்பந்ததாரர் மீது ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில் பயணிகள் தங்கள் பகுதி உணவுகளை இமெயில், எஸ்.எம்.எஸ். மூலம் ஆர்டர் செய்து பெறும் வகையில் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களில் ஃபுட் கோர்ட் அமைக்கப்படும். இந்த சேவை முதல்கட்டமாக புது டெல்லி அமிர்தசரஸ், புது டெல்லி ஜம்மு தாவி மார்க்கங்களில் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.