மணிஷ் திவாரி 
இந்தியா

மசோதாக்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி சந்தேகம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி நேற்று கூறியது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதன் மீதான விவாதத்தை திட்டமிடுவதற்கான 10 நாள் அவகாசத்தை மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பயன்படுத்த முடியாது. அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அனைத்தும் அரசியலமைப்பு ரீதியாக சந்தேகத்துக்குரியவை.

எனவே, நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு நிறைவேற்றப்பட்ட அனைத்து சட்டங்களின் தன்மை அவை சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டதா இல்லையா என்பதை நீதிமன்றத்தால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT