இந்தியா

ரோஹிங்கியா அகதிகள் ஊடுருவல் காவல் துறைக்கு அசாம் முதல்வர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: அசாம் மாநிலத்தின் பொங்கைகானில் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாடு நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியதாவது: ரோஹிங்கியாக்கள் அசாம் மாநிலம் வழியாக ஊடுருவி டெல்லி மற்றும் காஷ்மீர் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர். அதனால் ரயில் நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அவர்களை அழைத்துவரும் தரகர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். லவ் ஜிகாத் பிரச்சினையும் அசாம் மாநிலத்தில் பெரும் பிரச்சினையாக உள்ளது. கட்டாய மதமாற்றம் இதில் உள்ள முக்கிய பிரச்சினை. இதுபோன்ற கட்டாய மதமாற்றங்களை போலீஸார் அடையாளம் காண வேண்டும். லவ் ஜிகாத் பற்றி காவல்துறை புலன் விசாரணை மேற்கொண்டு அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

முன்பு அசாம் மாநிலத்தில் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளும்போது யாரும் மதம் மாறமாட்டார்கள். ஆனால் தற்போது லவ் ஜிகாத் மூலம் மத மாற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. அசாம் மாநிலத்தில் போதைப் பொருள் கடத்தலையும் தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். மானிய உரங்கள் இந்தியாவை விட்டு வெளியில் செல்லாதபடியும், மது, பர்மா பாக்குகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதையும் தடுக்க வேண்டும். இவ்வாறு ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசினார்.

SCROLL FOR NEXT