பாதுகாப்பு துறைக்கான ஒதுக்கீடு ரூ,2,29,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று 2014-15ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்கையில் தெரிவித்தார்.
மேலும் அருண் ஜேட்லி தெரிவித்ததாவது: ஒரே மாதிரியான பதவிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் போழுது வரும் ஓய்வூதிய வேறுபாடுகளை களைவதற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பிற்காக, பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயல்பட பாதுகாப்பு துறையை நவீனப்படுத்த இடைகால நிதிநிலை அறிக்கையில் தெரிவித்ததோடு ரூ.5000 கோடி வழங்கப்படும்.
இதன் மொத்த தொகை ரூ.1000 கோடி ஆகும். இதில் எல்லைப் பகுதிகளின் ரயில் சேவை மேம்பாடும் அடங்கும். கொள்முதல் முறையை வேகமாகவும், திறமையாகவும் செயல்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கூறினார்.