இந்தியா

திருச்சூர் பூரம் விழாவில் தாக்குதல் நடத்தப்படும்: ஐஎஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

ஐஎஸ் அமைப்பின் பிராந்திய பிரிவான தவுலதுல் இஸ்லாம், தனது அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு சமீபத்தில் ஒரு குரல் பதிவை (ஆடியோ) வெளியிட்டுள்ளது. சுமார் 10 நிமிடங்கள் ஓடும் அதில் ஒருவர் மலையாள மொழியில் பேசுகிறார்.

“ஐஎஸ் முஜாஹிதீன் அமைப்பினர் உலகின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்துகின்றனர். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை திருவிழாவின்போது, நமது அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தாக்குதல் நடத்தினார். அதில் பலர் உயிரிழந்தனர். இதுபோல, திருச்சூர் (கேரளா) பூரம் அல்லது கும்பமேளா உள்ளிட்ட திருவிழாக்களின்போது உங்கள் புத்திசாலிதனத்தைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துங்கள். லாரியை பயன்படுத்துங்கள். உணவில் விஷம் கலந்து விடுங்கள். அல்லது கத்தியைப் பயன்படுத்துங்கள். குறைந்தது ரயிலை தடம்புரளச் செய்யுங்கள்” என அவர் பேசி உள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த 100 பேர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதாக கேரள போலீஸார் கூறியிருந்த நிலையில் இந்த ஆடியோவெளியாகி உள்ளது. இந்த கேரள மாநிலம் காசர்கோடு பகுதியிலிருந்து ஆப்கன் சென்று ஐஎஸ் அமைப்பில் சேர்ந்த ரஷித் அப்துல்லாவின் குரலாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT