இந்தியா

பெண்கள் பாதுகாப்புக்கு 4 ஆயிரம் மகளிர் போலீஸ்

செய்திப்பிரிவு

ரயில்களில் தனியாக பயணம் செய்யும் பெண்களின் பாது காப்பை உறுதி செய்ய சிறப்பு நடவடிக் கைகள் எடுக்கப்படுவதாக ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்து அவர் கூறியதாவது:

ரயில்களில் தனியாக பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, எல்லா வகுப்புகளிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ரயில்களிலும் ரயில் நிலையங் களிலும் பாதுகாப்பை வலுப்படுத்த 17000 ரயில்வே போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் பணியில் சேர்வார்கள்.

மேலும் 4000 மகளிர் போலீஸாரை நியமிக்கவும் உத்தேசித்துள்ளோம். மகளிர் போலீஸார் சேவையில் சேர்ந்ததும் மகளிர் பெட்டிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். எல்லா வகுப்புகளிலுமே பெண் பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

பயணத்தின்போது ஏதாவது ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் பயணிகள் தொடர்பு கொள்ள வசதியாக ரயில்களில் பாதுகாப் புக்கு செல்லும் போலீஸாருக்கு மொபைல் போன் வழங்கப்படும். அவசர தொலைபேசி வசதி எண்களும் அதிகரிக்கப்படும்.

ரயில் நிலையங்களில் சுற்றுச்சுவர் அமைப்பதை அரசு, தனியார் கூட்டுமுயற்சியில் மேற்கொள்வதற்கான சாத்தியம் ஆராயப்படும்.

SCROLL FOR NEXT