இந்தியா

டெல்லியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் தலைவர் கார்கே மரியாதை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸின் தேசியத் தலைவர் மலிகார்ஜுனா கார்கேவும் கலந்து கொண்டார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியின் சேனா பவனுக்கு அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஜய் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அதன் துணைத் தலைவர் பெ.இராகவன் நாயுடு, பொதுச் செயலாளர் இரா.முகுந்தன், செயற்குழு உறுப்பினர் பி.அமிர்தலிங்கம் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் டெல்லி வாழ் தமிழ் மக்கள் பலரும் ஆர்வமுடன் பெருமளவில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT