இந்தியா

சந்திரயான் -3 விண்கலம் திட்டம் வெற்றியடைய பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து

செய்திப்பிரிவு

மும்பை: சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் அக்சய் குமார்: எழுச்சிக்கான நேரம். இஸ்ரோவில் பணியாற்றும் அனைத்து விஞ்ஞானிகளையும் வாழ்த்துகிறேன். 100 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்கின்றனர்.

சுனில் ஷெட்டி: இந்தியாவின் தொழில்நுட்ப வலிமை புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. சந்திரயான் -3 விண்கலத்தின் பயணம் வெற்றி அடைந்து புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட வாழ்த்துகிறேன்.

நடிகர் அஜய் தேவ்கன்: இன்றைய தினம் அனைத்து கண்களும் வானத்தை நோக்கி பார்த்தன. தொலைக்காட்சி பெட்டி முன்பு மக்கள் ஆவலோடு காத்திருந்தனர். அவர்களின் ஆசை நிறைவேறி உள்ளது. சாதனை படைத்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகளையும் வாழ்த்துகிறேன். உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்போம்.

ரித்திஷ் தேஷ்முக்: சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதன் மூலம் நாடு பெருமை அடைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க திட்டம் வெற்றியடைய வாழ்த்துகள்.

நடிகர் ஜாக்கி ஷெராப் சந்திரயான் -3 விண்கலம் தொடர்பான வீடியோவை பதிவு செய்து இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT